Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீபாவளி முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!!

தீபாவளிக்கு புதிய படங்கள் திரைக்கு வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசு நிபந்தனையோடு திரையரங்குகள் திறக்கப்பட்டன. புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால் ஏற்கனவே வெளியான ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, கமலஹாசன் நடித்த பாபநாசம், விஜயின் துப்பாக்கி, பிகில், அஜித்குமாரின் விசுவாசம், தனுஷின் அசுரன், தாராள பிரபு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

அதிலும் சில திரையரங்குகளில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் திரையிடப்படுகின்றன. அதனால் திரையரங்குகளில் கூட்டம் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் விபிஎப் கட்டண பிரச்சனையில் தீர்வு ஏற்பட்டு தீபாவளிக்கு புதிய படங்களை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத், சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள இரண்டாம் குத்து 2, தட்றோம் தூக்குரோம், ரிஷி ரித்திக் நடித்துள்ள மரிஜுவானா, பச்சைக்கிளி, அமுதவாணன் இயக்கத்தில் பவாஷ் நடித்துள்ள கோட்டா ஆகிய 6 புதிய திரைப்படங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள் திரைக்கு வருகின்றன.

இதனையடுத்தே தீபாவளி பண்டிகைக்கு புதிய படங்கள் திரைக்கு வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |