தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. இதில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். அதிக வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.