என்ற பெயரில் தூய்மை இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தூய்மையை கடைபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் ஒவ்வொரு வருடமும் தூய்மையான நகரங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது. அதன்படி நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் 23 சிறிய நகரங்கள் இடம் பெற்றுள்ளது. சென்னை 43வது இடத்திலுள்ளது. கடந்த வருடம் 45 ஆவது இடத்தில் இருந்த நிலையில் நடப்பாண்டு முன்னேற்றம் கண்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசு ஒருங்கிணைந்து தூய்மை பணி களுக்கு அளித்த முக்கியத்துவமே காரணம் என்று தெரிகிறது. கோயம்புத்தூர் நகரம் 40லிருந்து 46 வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. மதுரை 47 ஆவது இடத்திலும், பெரிய நகரங்களின் பட்டியலில் திருச்சி, ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகியவை இடம் பெற்று உள்ளன. திருச்சி 102வது இடத்திலிருந்து 121 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. தாம்பரம் 314ல் இருந்து 200க்கும், பல்லாவரம் 283ல் இருந்து 233க்கும், ஆவடி 367ல் இருந்து 267க்கும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதுதவிர சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்கள் தூய்மைப் பணிகளில் முன்னேற்றம் கண்டுள்ளன.