தமிழகத்தில் தேர்தல் வெற்றியை வயதானவர்கள் நிர்ணயிக்க போவதாக தேர்தல் ஆணையர் சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் 80 வயதான வாக்காளர்கள் 12.91 லட்சம் பேர் இருப்பதாக தேர்தல் ஆணையர் சாகும் தகவல் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக சென்னையில் 80 வயதான வாக்காளர்கள் 1,08,718 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 8,253 பேரும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த முறை நடைமுறைப் படுத்தப்பட்டால்பீகாரில் நடந்தது போல் தமிழகத்திலும் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.