Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல்…. 80வயது முதியோருக்கு – ஆணையம் திடீர் அறிவிப்பு …!!

தமிழக சட்டசபை தேர்தலில் முதியோர், மாற்று திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகளுடன் இரண்டு நாள் ஆலோசனை நடத்தினார். இன்று விவிபேட் இயந்திரம் தொடர்பான கையேடு வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தை அதிகாரிகள் வெளியிட்டனர். பின்னர் தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆணைய அதிகாரிகள் விளக்கம்

இதில், செய்தியாளர்களை சந்தித்த, தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா பேட்டியளித்தார். சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினர் அதிகாரிகளுடன் விவாதித்தோம். ஊரகப் பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் அனைவரையும் வாக்களிக்க செய்வதே இலக்கு.

கொரோனா தொற்றுக்கிடையே பிகார் பேரவைத் தேர்தல், இடைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். கொரோனா பரவாத வகையில் தேர்தல் நடத்துவதே ஆணையத்தின் நோக்கம். 80 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு செய்து தரப்படும். 80 வயதான வர்கள் தபாலில் வாக்களிக்கலாம் என தெரிவித்தனர்.

Categories

Tech |