Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு…. அரசு புதிய விவரங்கள் சேகரிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதில் முதல் கட்டமாக 9 – 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 50 சதவீத சுழற்சி முறையில் வருகை தர முடிவு எடுக்கப்பட்டு நேரடி வகுப்புகள்  நடைபெற்று வருகிறது. மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி கல்வித்துறை  மேற்கொள்ளபடுகிறது.

இந்நிலையில் மாணவர்களின் குடும்பத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மற்றும் செலுத்தி  கொள்ளாதவர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கான ஒப்புதல் கடிதம் ஆகிய விவரங்களை  சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. மேலும் இந்த ப டிவத்தை பெற்றோர்கள் நன்றாக படித்த பின்னர் கையெழுத்திட வேண்டும். எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு இந்த படிவத்தில்  உள்ளதை நன்றாக  வாசித்துக் காட்டி அவர்களது கையொப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் முதல் கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

Categories

Tech |