Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு…. சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்….!!!

தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா வந்த நிலையில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8 ஆம் வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது பள்ளிகள் திறக்கப்படவிருப்பதால் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் 3 வது அலையின் பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதால் அரசு வழங்கியுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை மக்கள் கவனமாக கையாள வேண்டும். நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படவிருப்பதால் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Categories

Tech |