Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை…. முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி மற்றும் அவர்களுக்கு இருப்பிடம் உணவு வசதிகளை ஏற்படுத்தும், மலையில் சரியும் மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆய்வுக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற உள்ளது.

Categories

Tech |