தமிழகத்தில் முக்கிய அணைகளில் பல, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக முக்கிய அணைகளில் இருந்து அதிகமான நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 99 அணைகள் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
அவற்றில் மேட்டூர், முல்லை பெரியாறு உள்ளிட்ட 15 அணைகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த அணைகளில் மூலமாக பல்வேறு மாவட்டங்களின் பாசனம், மின்சாரம், குடிநீர் போன்ற தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் அணைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் 90% நீரை சேமிக்க அரசு பரிந்துரை செய்துள்ளது. மேலும் அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பெரிய அளவிலான வெள்ள பாதிப்புகளிலிருந்து தடுக்க முடியும் என்று நீர் வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.