Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து 4ஆவது நாளாக 4000 தாண்டிய கொரோனா ….!!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் 68,254 பேர் கொரோனா பாதிப்பில் சிக்கி இருக்கின்றார்கள்.தற்போது வரை  24,890 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இன்று மட்டும் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 73  பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 1 – 3,882

ஜூலை 2 – 4,270

ஜூலை 3 – 4,389

ஜூலை 4 – 4,280

ஜூலை 5 – 4,150

Categories

Tech |