தமிழகத்தில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கையை வகுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கைக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி வலுவான, பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை ஏற்படுத்தும் வகையில் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் மொபைல் டவர் நிறுவினால் விண்ணப்பத்திற்கு ஒரு முறை திரும்பப் பெறாத கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய், அண்டர்கிரவுண்ட் டெலிகிராப் கட்டமைப்பை அமைக்க ஒரு விண்ணப்பத்திற்கு கிலோ மீட்டருக்கு 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.