தமிழக அரசின் தொழில்துறையின் பெயரை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி தொழில்துறை என்று அழைக்கப்பட்டு வந்த அரசுத்துறை இனி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கு ஏற்ற வகையில், அரசு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இனி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், தமிழ் ஆட்சி மொழி,தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Categories