Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனை…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

சென்னையில் 200 நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சு. அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மானிய கோரிக்கையானது நடைபெற்றுள்ளது. அப்போது வினாக்கள் விடைகள் நேரத்தில் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி பேசியதாவது, திருவிக நகர் சட்டமன்றத் தொகுதி மண்டலம் 6 வார்டு 73 இல் அமைந்துள்ள புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனை, 24 மணி நேர மருத்துவமனையாக செயல்பட்டு வரும் நிலையில், அங்கு 60 படுக்கைகள் மட்டுமே உள்ளது.  இந்நிலையில் அதை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சிறப்பு மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், மயக்க மருந்து நிபுணர் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் ஆகியோர் பணிக்கு தேவைப்படுவதால்,  அவற்றை நிறைவேற்றித் தர ஆவண செய்ய வேண்டும் ” என்ற கோரிக்கையை முன் வைத்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்து இதற்கு பதிலளித்த  அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதாவது, கடந்த 2 நாட்களுக்கு  முன் நகர்ப்புறங்களில் உள்ள மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு முதல்வர் 110 விதியின் கீழ் 708 நகர்ப்புற மருத்துவமனைகள் ஏற்படுத்துவதற்கான  அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மேலும் சென்னையை பொருத்தவரை 200 மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு வட்டத்திற்கு ஒரு மருத்துவமனை என பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  எனவே பெரிய மருத்துவமனைகளை நோக்கி மக்கள் வருவதை குறைப்பதற்கான நடவடிக்கையாக நகர நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன எனவும் புதிதாக 7 மருத்துவமனைகள் வரக்கூடிய சூழலில் ஏற்கெனவே இருக்கும் 60 படுக்கைகளே போதும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |