தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். 15 கூட்டுறவு சங்கங்களில் சுமார் 12 கோடி வரை முறைகேடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் தொடர்ச்சியாக சுய உதவி குழுக்களுக்கு வழங்கும் கடன் வட்டியை குறைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார். எனவே ஒரு வாரத்திற்குள் நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.