Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் நதிகள் இணைப்பு…. மத்திய பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு…..!!!!

2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அதன் தொடர்ச்சியாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2022- 23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 11 மணி அளவில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படும். இதில் கோதாவரி-பெண்ணையாறு- காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட உள்ளது. சிறு குறு தொழில்களுக்கான அவசர கடன் உறுதி திட்டம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கபடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இரண்டாவது முறையாக காகிதமில்லா நிதி அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும்.

 

Categories

Tech |