Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு ஒரே ஒரு ஆசிரியர் தேர்வு…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்-5 தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்தியஅரசு சார்பாக தேசிய நல்லாசிரியருக்கான விருது, தமிழ்நாட்டில் மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த வருடம் தேசிய விருதுக்கு மத்திய கல்வித்துறை சார்பாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விருதுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை விசாரித்த பள்ளிக்கல்வித்துறை, 6 பேரை மட்டும் மத்திய கல்வித்துறைக்கு பரிந்துரைத்தது.

அந்த 6 ஆசிரியர்களிடமும் இந்த மாதம் முதல் வாரத்தில் டில்லியிலுள்ள கல்வித்துறை அதிகாரிகள் குழு ஆன்லைனில் நேர்காணல் நடத்தியது. இதையடுத்து நேர்காணல் மற்றும் ஆசிரியர்களின் பணி விவரங்கள் அடிப்படையில் தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. அவற்றில் தமிழகத்திலிருந்து ராமச்சந்திரன் என்ற ஆசிரியர் மட்டும் தேர்வானார். அதவது ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியராக ராமச்சந்திரன் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தினசரி தாமதம் இன்றி பணிக்கு வருவது, மாணவர்களுக்கு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாடம் நடத்துவது, நல்லொழுக்க வகுப்புகளை நடத்துவது என சிறப்பாக செயல்பட்டவர் ஆவார். அத்துடன் தேசிய விருதுக்கு நேர்காணல் நடத்திய டில்லி அதிகாரிகளிடம் நமஸ்தே, வணக்கம் என கூறியுள்ளார். அதன்பின் அவர்களின் கேள்விகளுக்கு தனக்கு தெரிந்த ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ராமச்சந்திரன் சரளமாக பதிலளித்துள்ளார். இவரது பணிகள் மற்றும் பன்மொழி திறனுக்கு சான்றாக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் ராமச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |