தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக புதுக்கோட்டையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெற உள்ள இந்த முகாமில் ஆர்வமுள்ளவர்கள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேரில் சென்று பங்கேற்கலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள வரும் இளைஞர்கள் உரிய சான்றிதழுடன் வரவேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.