தமிழகத்தில் தனியார் தண்ணீரில் லாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தனியார் தண்ணீர் லாரிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள. சென்னையில் உள்ள பல்லாவரத்தில் அனுமதி இன்றி தண்ணீர் எடுத்ததாக கூறி சில தண்ணீர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் நிலத்தடி நீரை எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பறிமுதல் செய்த லாரிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இந்தப் போராட்டமானது நவம்பர் 7-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் தமிழக முழுவதும் உள்ள தனியார் தண்ணீர் லாரிகள் போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.