நவம்பர் 16 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்
கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. எப்போது பள்ளிகள் திறக்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகாமல் இருந்ததால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்றோடு ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் சில தலைவர்களை அறிவித்து நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை அளிக்கப்பட்டிருக்கும் தளர்வுகளில் பள்ளி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நடக்கும் என்றும் கல்லூரிகள் செயல்பட தொடங்கலாம் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். அதேபோன்று நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளார்.