தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்ற (14-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை கொரட்டூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள தேர் திருவிழா காரணமாக மின்தடை பகுதிகள் குறித்த விவரத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி அம்பத்தூர் வட்டம், கொரட்டூர் அன்னை நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாடலாத்திரி சீயாத்தம்மன் கோயில் தேர் திருவிழா வரும் 14.08.2022 அன்று நடைபெற உள்ளது. தேர் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை வீதி உலா வருவதால் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டு தேர் நிலையில் நிறுத்திய பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்: சீயாத்தம்மன் கோயில் தெரு, கண்டிகை தெரு, விநாயகர் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, பள்ளத் தெரு, முருகன் தெரு, மேட்டுத்தெரு, சிவலிங்கபுரம், ஸ்டேசன் ரோடு, பாலாஜி நகர், கொட்டூர் சுரங்கபாதை வரை
நெல்லை மாவட்டம்:
மானூர் கிராமப்புற கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டான்குளம், பிள்ளையார்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றையதினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக நெல்லை கோட்ட செயற்பொறியாளர் ஜான்பிரிட்டோ தெரி வித்துள்ளார்.