தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (ஜூன் 24) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம்: கோவிலம்பாக்கம் – வடிவேல் நகர், கோபால் நகர், விஜயலட்சுமி நகர், இந்திரா நகர்; செம்பாக்கம் – மாடம்பாக்கம் மெயின் ரோடு, சுதர்சன் நகர், ஸ்ரீதேவி நகர், அம்பிகா நகர்; பெருங்களத்தூர் – காந்தி சாலை, கட்டபொம்மன் தெரு, ராஜீவ் காந்தி தெரு, காமராஜர் நகர்; ராகவேந்திரா நகர் – விஜிபி பிரபு நகர், வீரத்தாமன் கோயில் தெரு, ஜெகநாதபுரம்; மடிப்பாக்கம் – 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு, துரைசாமி தெரு, தர்மராஜா கோயில் தெரு, அன்பு நகர், சரஸ்வதி தெரு, பாலமுருகன் தெரு மற்றும் சுப்ரமணி தெரு.
போரூர்: திருநீர்மலை மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், மைக்ரோ எஸ்டேட், பெருமாள் நகர் மற்றும் அருணகிரி நகர்.
கிண்டி: ராஜ் பவன், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, டிஜி நகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம் மற்றும் மூவர்சம்பேட்டை.
தண்டையார்பேட்டை: சாத்தாங்காடு – காமராஜ் சாலை, பாடசாலை, ராம்சாமி நகர், ராஜாஜி நகர், ஜெயலலிதா நகர், பெரியார் நகர், ஜெயபால் நகர், பெருமாள் கோயில் தெரு கடப்பாக்கம்; டோல் கேட் – பொன்னுசாமி தெரு, சுடலைமுத்து தெரு, கோவிந்தராஜ் தெரு மற்றும் வீரராகவன் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
வியாசர்பாடி: லெதர் எஸ்டேட், ரவி கார்டன், மேத்தா நகர், பழனியப்பா நகர் மற்றும் கண்ணபுரம்.
தி.நகர்: மாடல் ஹட்மென்ட் சாலை 1 முதல் 6வது குறுக்குத் தெரு, அப்துல் அஜீஸ் தெரு, தெற்கு தண்டபாணி தெரு, ராமநாதன் தெரு, ராமேஸ்வரம் சாலை, கோயில் கோபுரம், கிவ்ராஜ் கட்டிடம்; மேற்கு மாம்பலம் – நரசிமிஹன் தெரு.
கே.கே.நகர்: வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம், கே.கே.நகர், அசோக் நகர், வடபழனி மற்றும் அழகிரி நகர்.
பெரம்பூர்: மாதவரம் மெயின் ரோடு, செயின்ட் மேரிஸ் சாலை, என்எஸ்கே தெரு, தன்ராஜ் புரம், ராஜன் நகர் 3வது தெரு, மூர்த்தி நகர், லட்சுமி நகர், விகேஎம் நகர், வடக்கு திருமலை நகர், காமராஜ் நகர், துரைசாமி தெரு, பந்தர் கார்டன் முழுப் பகுதி, பேப்பர் மில்ஸ் சாலை, வேணுகோபால். தெரு, பெரம்பூர் பகுதி, சாஸ்திரி நகர் 1 முதல் 5 வது தெரு, அருள் நகர் மெயின் ரோடு, பின்னி நகர் மெயின் ரோடு, சுப்ரமணி கார்டன், ரேகா நகர், குமரன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி: சிடிஎச் சாலை, சரஸ்வதி நகர், ஆர்த்தி நகர், தென்றல் நகர், வசந்தம் நகர், விவேகானந்த நகர் மற்றும் ஏஜிடி நகர்.
வேலை முடிந்தால் மதியம் 2 மணிக்கு முன் சப்ளை மீண்டும் தொடங்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்:
தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய கோட்டம் புதுக்கோட்டை மின் வினியோக பிரிவுக்கு உட்பட்ட புதூர், முடிவைதானேந்தல், வாகைகுளம், கே.புதூர் ஆகிய பகுதிகளிலும், வல்லநாடு மின் வினியோக பிரிவுக்கு உட்பட்ட கலியாவூர், சின்ன கலியாவூர், அம்பேத்கர் நகர், காலாங்கரை, உழக்குடி ஆகிய பகுதிகளிலும், குளத்தூர் மின் வினியோக பிரிவுக்கு உட்பட்ட வேப்பலோடை உப்பளம் பகுதிகளிலும், பழையகாயல் மின் வினியோக பிரிவுக்கு உட்பட்ட அகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணி நடக்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
கோவில்பட்டி பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது.
எனவே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி உப மின் நிலையத்தின் நடராஜபுரம் தெரு, மூப்பன் பட்டி, வேலாயுதபுரம் மெயின் ரோடு, சங்கரலிங்கபுரம், இலுப்பையூரணி, தாமஸ் நகர், கூசாலிபட்டி, வண்ணாரப் பேட்டை ஆகிய பகுதிகளுக்கும், எட்டயபுரம் உப-மின் நிலையத்தின் பவர்கிரிட் எதிரிலுள்ள வளர்மதி பெட்ரோல் நிலையம் பகுதி, சின்ன மலைக்குன்று, வங்காரு பட்டி, உசிலங்குளம் ஆகிய பகுதிகளுக்கும், விஜயபுரி உப மின் நிலையத்தின் ஈராச்சி, விஜயபுரி, கசவன்குன்று, கொடுக்காம் பாறை ஆகிய பகுதிகளுக்கும், எம். துரைச்சாமிபுரம் உப மின் நிலையத்தின் சிவஞானபுரம், வாகை தாவூர், சீனி வெள்ளாளபுரம், ஆசூர், கோபாலபுரம் ஆகிய பகுதிகளுக்கும், பசுவந்தனை உப மின் நிலையத்தின் சி. குமரெட்டியாபுரம் பகுதிக்கும் மேற்கண்ட நாளில் மேற்கண்ட நேரங்களில் மின் வினியோகம் இருக்காது.
சிவகங்கை மாவட்டம்:
காரைக்குடி மின் கோட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, கானாடுகாத்தான், கல்லல், சாக்கவயல், தேவகோட்டை துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை உயரழுத்த மின் பாதையில் உள்ள மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ள மின்கம்பங்கள் மாற்றும் பணிக்காக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி காரைக்குடி துணை மின் நிலையத்தில், அண்ணாநகர் பீடரில் ஜீவா நகர், போலீஸ் காலனி, செக்காலை, சுப்பிரமணியபுரம் தெற்கு, புதிய பஸ் நிலையம், அழகப்பாபுரம், எச்.டி.சி. பீடரில் ஆறுமுகநகர், மன்னர் நகர், திலகர் நகர், பாரிநகர், தந்தை பெரியார் நகர், சிக்ரி.
கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் கானாடுகாத்தான், சூரக்குடி, திருவேலங்குடி, ஆத்தங்குடி, பலவான்குடி, உ.சிறுவயல், ஆவுடைப் பொய்கை, நெற்புகப்பட்டி, நேமத்தான்பட்டி.
கல்லல் துணை மின் நிலையத்தில் சாத்தரசம்பட்டி பீடரில் கல்லல், கீழப்பூங்குடி, அரண்மனை சிறுவயல், சாத்தரசம்பட்டி, வெற்றியூர், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு.
சாக்கவயல்
சாக்கவயல் துணை மின் நிலையத்தில் வீரசேகரபுரம், கருநாவல்குடி, மித்திரங்குடி, பீர்க்கலைக்காடு, ஜெயம்கொண்டான், சிறுகப்பட்டி செங்கரை. மித்ராவயல் பீடரில் சாக்கவயல், மித்ராவயல், திருத்தங்கூர், மாத்தூர், இலுப்பக்குடி, லட்சுமி நகர், பொன்நகர். தேவகோட்டை துணை மின் நிலையத்தில், வேப்பங்குளம் பீடரில் – உடப்பன்பட்டி, கோட்டூர், மாவிடுதிகொட்டை, திருமணவயல் மேலமுன்னி, வேலாயுத பட்டினம். கண்ணங்குடி பீடரில் கண்ணங்குடி, ராம்நகர், இறகுசேரி, பைக்குடி, அகதிகள் முகாம், நடராஜபுரம், அனுமந்தகுடி ஆகிய கிராமங்களில் மின் வினியோகம் தடைசெய்யப்படும்.
மானாமதுரை
மானாமதுரை மற்றும் பொட்டப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகள், தெ.புதுக்கோட்டை, இடைக்காட்டூர் ஆகிய 4 உயரழுத்த மின் பாதைகளில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, நல்லாண்டிபுரம், எஸ்.காரைக்குடி, சன்னதி புதுக்குளம், மேலப்பிடாவூர், குசவபட்டி, காஞ்சிரங்குளம் காலனி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. ஆனால் மானாமதுரை சிப்காட், கொன்னக்குளம், மனக்குளம், மானாமதுரை நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.