தமிழகம் முழுவதும் நாளையும் பேருந்துகள் இயங்காது என்ற அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஊதிய உயர்வு மற்றும் பணி ஓய்வு பணப்பயன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. அதன்படி சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. அதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணம் ஏற்கக் கூடியது இல்லை. எனவே அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இயங்காததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் பேருந்துகள் இயங்காது என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.