தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆடி அமாவாசையான நாளை பக்தர்கள் கோயில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 11ம் தேதி ஆடிப்பூரம் நாளிலும் அனைத்து கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும், ஆகம விதிப்படி கோயில்களில் பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.