தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மறைமலைநகர் என்.எச்-2, காட்டூர், ரெயில் நகர், காந்திநகர், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூர், கொருகந்தாங்கல், வி.ஜி.என். காவனூர் மற்றும் மறைமலைநகர் சிட்கோ தொழிற்பேட்டை பகுதி, கீழக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும் எனவும், மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.