திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். பக்த கோடிகள் உள்ளூர்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 10ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பணி நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.