நாமக்கல் மாவட்டத்தில் நாளை வெண்ணந்தூரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்து தவித்தனனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு உருவாக்கி வருகிறது. அந்த வகையில் நாளை நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்துாரில் தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க இருக்கின்றனர்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், மாவட்ட இயக்க மேலாண் அலகு என்பதன் கீழ் இம்முகாம் நடைபெற இருக்கிறது. இம்முகாம் வெண்ணந்தூர் வட்டார இயக்க மேலாண் அலகில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இம்முகாமில் நிறுவனங்களும் பங்கேற்கலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள நினைக்கும் நிறுவனங்கள் திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண் அலகு, கலெக்டர் அலுலகம், கூடுதல் கட்டிடம், நாமக்கல் என்ற முகவரிக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். அத்துடன் 04286 281131 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும் பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்கு இன்று மாலை 5 மணி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இம்முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பணியை தேர்ந்தெடுத்து கொண்டு வேலைகளை பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.