Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை சட்டசபை கூட்டத்தொடர்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நாளை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை திங்கட்கிழமை மீண்டும் சட்டசபை கூட்டம் தொடங்கும்.

இந்த கூட்டத்தில் இயற்கை சீற்றங்கள் குறித்து துயர் தணிப்புத்துறை, பேரிடர் மேலாண்மை துறை மற்றும் வருவாய்த் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும். இதற்கு வருவாய்த் துறை அமைச்சர் விளக்கமளிப்பார். இதனையடுத்து வருகிற மே 10-ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முக்கியமான சில சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவார். மேலும் சில புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |