தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.அதனால் தமிழக அரசு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் முடிவுக்கு முன்பும் பின்பும் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றியும் அதிகமான ஓட்டு பதிவினால் சட்டமன்ற தேர்தல் முடிவு தாமதமாகலாம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஓட்டு எண்ணும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும். 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு உள்ளனர். மொத்தம் நேற்று வரையில் சட்டமன்ற 5,64,253 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கொரோனா பாதிப்பால் தேர்தல் அதிகாரி ஆறு பேர் மாற்றப்பட்டுள்ளனர். எவ்வாறாக இருப்பினும் நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்று அவர் கூறியுள்ளார்.