Categories
சென்னை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் நாளை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகின்றது. தென் மாவட்டமான திருநெல்வேலி , தூத்துக்குடி, விருதுநகர் மழையில் இருந்து தப்பவில்லை. அதே போல ராமநாதபுரம், கோயம்புத்தூர் , நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும்  கனமழை பெய்து வருகின்றது.கனமழையால் தாழ்வான பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.அதே போல கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னையிலும் தொடர்ந்து  மழை பெய்து வருவதால் , சென்னையின்  புறநகர் பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தென் தமிழக கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்  கொண்டுள்ளதாகவும் இதனால் தமிழகம் மற்றும் புதுவை  நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வானிலை குறித்து,  தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் அவர்கள் தெரிவித்துள்ளதில் , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட  மாவட்டங்களில் வருகிற 7,8-ந்தேதிகளில் கிழக்கு திசை நோக்கி காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |