தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையின் தாக்கம் காரணமாக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பு விதிமுறைகளான இரவு நேர ஊரடங்கு மற்றும் வார கடைசி நாட்களில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என உத்தரவிட்டார். அதன்படி ஜனவரி 2 ஆம் வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நாட்களில் நிறைவு பெற இருந்த நிலையில்கடந்த 3 நாட்களுக்கு முன்பு முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 1- 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும். மேலும் இரவு ஊரடங்கு மற்றும் வார கடைசி நாள் முழு ஊரடங்கு போன்றவைகளுக்கும் தடை என முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில் பள்ளிக்கல்விதுறை, கொரோனா தொற்று பரவல் தற்போது இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும் பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று குழப்பமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அதன் விளைவுகளை எப்படி எதிர்கொள்வது என்று பள்ளி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. ஆகவே பள்ளிகள் திறப்பு தொடர்பாக தெளிவான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.