தமிழகத்தில் மாண்டஸ் புயலின் காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் இன்று நள்ளிரவு மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னையில் யாரும் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும், வாகன ஓட்டிகள் அனாவசியமாக எங்கும் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு புயலின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் புயலின் காரணமாக நாளையும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் சில மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் புயலின் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் இன்னும் கூடுதல் மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.