தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை கனமழையும் நாளை மறுநாள் முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நவம்பர் 23, 24 தேதிகளில் நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.