Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மறுநாள்…. வெடிக்கிறது போராட்டம்…!!!

ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் நேற்று காலை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. காலை முதலே மதுபிரியர்கள் டாஸ்மாக் முன்பு வரிசைகட்டி நின்று அதிகளவில் மதுவை வாங்கி சென்றனர்.  இந்நிலையில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.165 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

டாஸ்மாக் திறப்பை எதிர்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் வரும் 17ம் தேதி, டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் தங்கள் வீட்டு வாசலிலும் வாய்ப்புள்ள இடங்களிலும் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து 5 பேருக்கு மிகாமல் கூடி மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கருப்புக்கொடி ஏந்தி  போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |