ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்த விலை உயர்வு நவம்பர் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்வால் சுமார் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலனடைவார்கள்.. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..