வேகமாகப் பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் , தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிறப்பிக்கப்பட்டு இருந்த முழு ஊரடங்கு , கூடுதல் கட்டுப்பாடுகளுடன் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி நாளைமுதல் திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் , மதுபான பார்களை செயல்பட அனுமதியில்லை. புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைவரும் இ-பாஸ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளிலும் அழகு நிலையங்கள், சலுங்கள் இயங்க அனுமதியில்லை. பெரிய கடைகள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் செயல்படவும் அனுமதியில்லை.
உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை. ஆனால், முழு ஊரடங்கு தவிர்த்த மற்ற நாட்களில் மளிகை காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படலாம். எந்த ஒரு வழிபாட்டு தளத்திற்கும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் , உரிய நடைமுறைகளைப் பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்தலாம். திருமண நிகழ்ச்சிகளில் ஐம்பது பேருக்கு மேலும், இறுதி ஊர்வலம் சடங்குகளில் 25 பேருக்கு மேலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது .