Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல்…. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான சூப்பர் நியூஸ்…!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் அடிப்படை கணினி பயன்பாடு, தொழில்நுட்ப திறன் வளர்ச்சி பயிற்சிகளை அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மற்றும் சம்கரா ஷிக்‌ஷா ஆகியவை இணைந்து நடத்துகிறது. இந்த பயிற்சியானது 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 12,500 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதில் கணினி மற்றும் செல்போன்களை எவ்வாறு கையாள்வது? ஆன்லைன் வகுப்புகள் நடத்த பல்வேறு கல்வி சார் தொழில்நுட்ப வசதிகளை எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |