Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் ஆசிரியர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து, செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் நாளை முதல் கணினி மற்றும் மொபைல் போன்களை எவ்வாறு கையாள்வது, கல்விசார் தொழில்நுட்ப வசதிகளை எப்படி பயன்படுத்துவது, ஹைடெக் ஆய்வகங்களை பயன்படுத்துதல், EMIS இணையத்தளத்தில் எப்படி தரவுகளை பதிவேற்றம் செய்வது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

Categories

Tech |