Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல்…. குடிசை பகுதி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி – அமைச்சர் தா.மோ.அன்பரசன்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியும் போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நாளை முதல் தொடங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |