சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு 143 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 3 பேர் அன்றையதினம் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று காலை 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 22 குறைந்துள்ளது. கடந்த 20 நாட்களில் அனுப்பிய மாதிரிகளில் 40க்கு மேற்பட்ட மாதிரிகளுக்கு முடிவுகள் இன்னும் வரவில்லை. அதேசமயம் தமிழகத்தில் தற்போது 39 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அபாய பட்டியலில் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களும், அபாய பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களும் ஏழு நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஆய்வு செய்ய மத்திய சுகாதார குழு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.