தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிப்ரவரி 1 (நாளை) முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் 100% மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையில் தமிழகத்தில் தற்போது தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டக் கூடிய நிலையில், 100% மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அரசு அறிவித்து இருப்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு நேரடி முறையில் பாடம் கற்பதா அல்லது ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பதா என்பதை பள்ளிகளே முடிவு செய்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது கட்டாயம் கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவு தொடர்பாக தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது…