தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அரசுப் பேருந்துகளை தவிர சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் ஏராளமான தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் நிலையில், சில காரணங்களால் அவை இயக்கப்படாமல் இருந்தன. ஊரடங்கு காரணமாக 4000 க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்க முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் நாளையில் இருந்து முழுமையாக ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.