Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று பல்வேறு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்து செல்லும். அதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |