Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை முதல் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதியளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து 27 மாவட்டங்களில் பயணிக்க ஏதுவாக 9,333 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |