தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளான,
# ஞாயிறு ஊரடங்கு நாட்களில் காலை 6 முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 முதல் 3 மணி வரையிலும், மாலை 6 முதல் இரவு 9 மணி வரையிலும் உணவகங்கள் செயல்பட அனுமதி
# தனியார் வாகனங்கள், கார் ஆட்டோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
# 50 சதவீத பயணிகளுடன் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி
# வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
# மெட்ரோ ரயில் சேவை ரத்து
# பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரை செல்ல தடை
# அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதி
# பெட்ரோல் பங்குகள் செயல்பட அனுமதி
# உணவு விடுதிகள், சிற்றுண்டிகள் தனது சொந்த வாகனத்தில் உணவுகளை எடுத்து செல்ல அனுமதி
# திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி
ஆகவே தேவையான ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.