Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (மே.25) உள்ளூர் விடுமுறை…. எங்கு தெரியுமா?…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பபெறப்பட்டுள்ளது. அதன்பின் தற்போது 2 ஆண்டுகளுக்கு பின் அனைத்து மாவட்டத்திலுள்ள வழிபாட்டு தலங்களிலும் கோயில் திருவிழாக்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இதில் பக்தர்கள் பங்கேற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் கரூர் மாநகரிலுள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழா சென்ற 8 ஆம் தேதியன்று கம்பம் நடுதலுடன் துவங்கப்பட்டது. அதன்பின் இன்று முக்கியநாள் என்பதால் பக்தர்கள் அனைவரும் மாவிளக்கு, அக்னி சட்டி, பால் குடம் எடுத்துக்கொண்டு ஜவஹர் பஜார் வழியாக சுமார் 1 கி.மீ தூரம் நடந்து, பிறகு கோயிலுக்கு வந்து தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துவார்கள். இத்திருவிழாவின் மிகவும் முக்கியமான நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்வு நாளை நடைபெற இருக்கிறது.

அதனை காண திருச்சி, மதுரை, சேலம், சென்னை வெளிமாவட்டத்தினரும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிவார்கள். இதனால் இதில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்க ஏதுவாக இம்மாவட்டத்தில் நாளை (மே 25) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் நாளை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்காது. இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் மாற்று வேலைநாள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |