தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நாளை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த நான்கு நாட்களுக்கு மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.