Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(15.12.22) இங்கே வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மறக்காம கலந்துக்கோங்க…!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது.

இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதால் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் பிஇ போன்ற படிப்புகள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாம் மூலம் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |