Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரம்…. இன்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த 6-ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.

அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்றும், நீட் தேர்வு கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் தொடரும் என்றும், நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக பேச அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10:30 மணி அளவில் தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |