தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்தார்.
அதில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து பொதுமக்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் என அனைவரிடமிருந்தும் 85,935 கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வேண்டாம் என்ற கருத்தே வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏகே ராஜன் குழு நேற்று முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
இந்நிலையில் நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது, நீதியரசர் ஏ கே ராஜன் அறிக்கை பற்றி எல்லாம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் விளக்கி தமிழகத்துக்கு நீட் விலக்கு கோரினோம். பாதிப்பு இருப்பதை அவர் உணர்ந்திருக்கிறார். விரைவில் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.