தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,32,044 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒரே நாளில் செலுத்தப்பட்டதில் இதுவே அதிகம். கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் வழி என்று அரசாங்கம் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.